Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Touch screen Dress-ஆ? - அசத்தும் சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள்

Touch screen Dress-ஆ? -  அசத்தும் சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய முன்மாதிரித் துணைத் திரையில் புகைப்படங்கள், காணொளிகள், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஆடையையே தொடுதிரையாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் அணியும் சட்டை, ஜாக்கெட் போன்ற ஆடைகளிலேயே தகவல்களைப் பார்க்கவும், விரலால் தொட்டுச் செயல்படுத்தவும் முடியும்.

பொதுவாகத் தொடுதிரைகள் கண்ணாடி அல்லது உறுதியான பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் மின்னணுக் கூறுகள் நுண்ணிய துணி இழைகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆடையின் ஒரு பகுதியையே திரையாகப் பயன்படுத்த முடியும்.


ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய முன்மாதிரித் துணைத் திரையில் புகைப்படங்கள், காணொளிகள், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், புளூடூத் வழியாகப் படங்களைப் பெறவும், சென்சார்கள் மூலம் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும் முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியச் சிறப்பு, துவைத்தாலும் டச் ஸ்கிரீன் செயல்படும் தன்மையாகும். சோப்புத் தூள் பயன்படுத்தி துணி துவைக்கும் இயந்திரத்தில் 50 முறை துவைத்த பின்னரும், திரையின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், 1,000 முறை வளைத்துச் சோதித்தபோதும் அதன் செயல்பாடு பெருமளவில் மாறவில்லை.

எதிர்காலத்தில் மருத்துவம், உடல்நலக் கண்காணிப்பு மற்றும் ஸ்மார்ட் ஆடைகள் தயாரிப்பில் இந்தத் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கலாம். இருப்பினும், இது இன்னும் ஆராய்ச்சி முன்மாதிரி நிலையில்தான் உள்ளது.

முந்தைய செய்தி
Trump claims France is 'burning down' over immigration policies
அடுத்த செய்தி
அடுத்த ஆண்டில் வரவிருக்கும் மின் பற்றாக்குறை: தமிழக அரசின் பக்கா ப்ளான்!

தொடர்புடைய செய்திகள்